Tamilnadu Suvisesha Balar Sangam

"Jesus said, Suffer little children, and forbid them not, to come unto me: for of such is the kingdom of heaven."
Matthew 19:14

தமிழ்நாடு சுவிசேஷ பாலர் சங்கம்

இந்தியாவிலுள்ள சிறுவர்களின் ஆத்தும வளர்ச்சிக்காக, கர்த்தருக்குள் மறைந்த தேவஊழியர் கனம் M.E. செரியன் மற்றும் சகஊழியர்களும் இணைந்து 1953ம் ஆண்டு சுவிசேஷகன் பாலர சங்கத்தை ஆரம்பித்தனர். இந்த ஊழியம் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பல நாடுகளிலும் சிறுபிள்ளைகளின் மத்தியில் மிகவும் ஆசீர்வாதமாக நடைபெற்று வருகிறது.

“சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள். அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்”(மத்தேயு 19:14) என்ற வேத வசனத்தின் அடிப்படையில் சிறுபிள்ளைகளை கர்த்தருக்குள்ளாக வழிநடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், வேத வசனத்தின் மூலம் சிறுபிள்ளைகளை ஆன்மீக பாதையில் வளர்க்க வேண்டும் என்ற இலட்சியத்தோடும், மறைந்த தேவ ஊழியர் சகோ. தாமஸ் செரியன் அவர்களால் இந்த ஊழியம் “தமிழநாடு சுவிசேஷ பாலர் சங்கம்” என்ற பெயரில் 2000ம் ஆண்டு தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

TNSBS VBS

“சிறுபிள்ளைகளுக்கு சுவிசேஷம்” என்ற உன்னதமான நோக்கத்தோடு தமிழ்நாடு சுவிசேஷ பாலர் சங்கம் ஏற்றுக்கொண்ட ஒரு வழிமுறையே VBS. இதன் மூலம் அநேகமாயிரம் பிள்ளைகளுக்கு சுவிசேஷம் அறிவிக்க முடியும். விடுமுறை நாட்களில் பிள்ளைகளுக்கு ஏற்றவிதமாக வேத புத்தகத்தில் உள்ள சம்பவங்களை எளிய முறையில் விளக்கிக்கொடுக்க ஒரு நல்ல வழி தான் VBS.
 இதன் மூலம் சிறுபிள்ளைகள் தேவனுடைய அன்பை அறிந்து குடும்பத்தில், சபையில், சமுதாயத்தில், சிறந்த நிலையில் பயனுள்ளவர்களாக மாறி வருகின்றார்கள்.

TNSBS VBS Life of Daniel

TNSBS VBS 2024

TNSBS VBS 2024

"தமிழ்நாடு சுவிசேஷ பாலர் சங்கம்" சிறுவர்கள் மத்தியில் அநேக வருடங்களாக, பலவிதங்களில் ஊழியங்களை நிறைவேற்றி வருகின்றது. விசேஷமாக விடுமுறை வேதாகம பாடசாலை (VBS) ஊழியமானது, கடந்த 22 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற கர்த்தர் கிருபை செய்தார்.

இந்த ஆண்டு "தெய்வீக சாகச பயணங்கள்" என்ற தலைப்பில் வேதபாடங்களை தயார் செய்து VBS ஊழியத்தை நிறைவேற்ற தீர்மானித்து, ஜெபித்து, ஆயத்தப்பட்டு வருகிறோம்.

VBS ஆசிரியர் பயிற்சி 2024

சிறுவர் ஊழியத்தில் ஆர்வமுள்ள சகோதர, சகோதரிகளுக்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் இடங்களில் ஆசிரியர் பயிற்சி நடைபெறும்.

Our Ministries

TNSBS VBS

தமிழ்நாடு சுவிசேஷ பாலர் சங்கம் சிறுவர்கள் நடுவில் பலவிதமான ஊழியங்களை நிறைவேற்றி வருகிறது. சபைகளிலுள்ள சிறுவர்களை ஆவிக்குரிய நிலைகளில் வளரச்செய்யும் சிறுவர் கூட்டங்களை நடத்தி வருகிறது.

* சிறுவர் மன்றங்கள்
* சிறுவர் முகாம்கள்
* ஞாயிறு பாடசாலை ஆசிரியர் பயிற்சி
* சிறுவர் ஊழிய உபகரணங்கள் வெளியீடு 
* விடுமுறை வேதாகமப் பள்ளி
போன்றவை இதன் ஊழியங்களாகும்.

கிறிஸ்துவை அறியாத சிறுவர்களை ஆண்டவரிடம் வழி நடத்தவும், இரட்சிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சத்தியத்தை கற்றுக்கொடுக்கவும் ஒவ்வொரு வருடமும் VBS ஊழியத்தினை செய்து வருகிறது.

TNSBS வெளியீடுகள்:
* VBS புத்தகங்கள்
* பாடல் இசைதட்டுக்கள்
* காட்சி உபகரணங்கள்
* சிறுவர் கைப்பிரதிகள்

TNSBS ONLINE VBS

Mobirise

கட்டி எழுப்புதல்

கடந்த 2021ம் ஆண்டு "கட்டி எழுப்புதல்" என்ற தலைப்பில் VBS பாடங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டு VBS நடைபெற்றது.
இது கொரோனா தொற்றுகாலமாக இருக்கின்றபடியால் நேரடியாக VBS நடத்த இயலாததினால் ஆன்லைன் மூலம் VBS நடைபெற்றது. அந்த பாடங்கள் கீழேயுள்ள லிங்குகளில் உள்ளன. கண்டு பயனடையுங்கள்.

கட்டி எழுப்புதல் VBS பாடங்கள்

VBS 2021 DAY - 1

VBS 2021 DAY - 2

VBS 2021 DAY - 3

VBS 2021 DAY - 3

VBS 2021 DAY - 5

சிட்டுக்குருவி நான்... 

TNSBS VBS 2023 பாடல்கள்

Contacts

Share this Page!

TNSBS

M-152, Sector I & II,
40 House Colony, Koodalputhur,
Anaiyur, Madurai - 625 017, INDIA
Phone: +91 9942 324 324

Follow Us
Other Source
  •  

    Tamilnadu Suvisesha Balar Sangam